“நான் ஒரு தமிழன்! நான் ஒரு தமிழன்!!” -இப்படிக் கூப்பாடு போடும் சாராசரி தமிழன் அல்ல நான்; தமிழ், தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம், தமிழ் வீரம், போன்ற எல்லா வகைகளையும் முழுதாக நேசிக்கக்கூடிய ஒரு முழுமையான தமிழ்ப்பித்தன்.
“நீ என்ன தமிழில் கறைகண்ட புலவனோ? தமிழைப்பற்றிப் பேசுவதற்கு?” என்று என்னைப் பார்த்துக் கேட்பவர்களுக்கு நான் கூறும் ஒரே பதில் “இல்லை, நான் புலவன் இல்லை, ஆனால் தமிழை ஒரு புலவன் நேசிப்பதைவிட அதிகம் நேசிப்பவன். ஒரு குழந்தை தன்தாயை நேசிப்பதற்கு அவன் ஒரு புலவனாக இருக்கத்தேவையில்லை”.
தமிழ் என்னுடைய தாய்மொழி, என்தாய் என்னை வயிற்றில் சுமந்த நேரங்களில் அவள் என்னுடன் பேசிய மொழி, அம்மொழி எனக்கு முதலில் ஒலித்த அக்கணமே நான் ஒரு தமிழனானேன். பிறந்தவுடன் என்தாய் ஊட்டிய பாலுடன், அவள் தேனிசைத் தாலாட்டால் தமிழ்ப்பாலையும் குடித்து வளர்ந்தவன் நான். என் மழலைக் குரல் உதித்த காலத்தில், என் மழலை மொழியில் “அம்மா”, “அத்தை”, “பாட்டி”, “அப்பா”, “தாத்தா”, எனத் தமிழில் பேசவைத்து ரசித்தவள் என்தாய்.
ஆனால், இந்நாளிலோ, தன்குழந்தை “அம்மா” என்று வாய்நிறைய அழைத்தாலும், அதைக் கண்டித்து “மம்மி” என்று அழைக்கச்சொல்லும் ’மம்மி’க்கள் அதிகம் உலாவும் இடமாக மாறிவருகிறது நாடு. ஒரு குழந்தை தன் தாய்மீது கொள்ளும் பாசம் எவ்வாறு ஒருபோதும் குறையாதோ, அதேப்போல், ஒரு தமிழனின் தமிழ் நேசம் ஒருபோதும் குறையாது.

No comments:
Post a Comment